போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் பத்து இலட்சத்து 56ஆயிரத்து 42பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 35ஆவது நாடாக விளங்கும் போர்த்துக்கலில் இதுவரை 10இலட்சத்து 56ஆயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 866பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 458பேர் பாதிக்கப்பட்டதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 37ஆயிரத்து 365பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 119பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.