ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
46/1 தீர்மானத்தில் நிறுவப்பட்ட அனைத்து வெளியக முன்மொழிவுகளையும் நிராகரிப்பதாக ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் தேவை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைவும் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துக்காட்டியுள்ளது.
மேலும் சர்வதேச விதிமுறைகள் மற்றும் மனித உரிமை நியமங்களுக்கு ஏற்ப அது அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.