நோர்வேயில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்டிசியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
குறித்த தேர்தலில் மைய இடதுசாரி கூட்டணி ஆட்சி அமைக்க வழி வகுத்திருக்கும் நிலையில் பிரதமர் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
‘நாம் வெற்றிபெற்றுள்ளோம்’ என அறிவித்திருக்கும் தொழிலாளர் கட்சி தலைவர் ஜோனஸ் காஹர், கூட்டணி அரசொன்றை அமைக்க முயற்சிக்கவுள்ளார்.
168 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 48 ஆசனங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளுடன் அது பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
நோர்வே எண்ணெய் தொழில்துறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய விடயங்கள் தேர்தல் பிரசாரத்தில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
நோர்வேயின் மிகப்பெரிய ஏற்றுமதியாக எண்ணெய் இருக்கும் நிலையில் நாட்டின் கார்பன் உமிழ்வை குறைக்க சில ஆண்டுகளுக்கு அந்த உற்பத்தியை நிறுத்த பசுமை கட்சி பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கம்சி குணரத்னம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.