மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் தொடர்ச்சியாக காட்டு யானையின் தொல்லை காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் அவதி நிலைக்கு உள்ளாவதுடன், பொருளாதாரத்தினையும் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 37ஆம் கிராமம், நெல்லிக்காடு ஆகிய பகுதிகளில் காட்டு யானையினால், மக்களின் வாழ்வாதார தொழிலாகிய மரவள்ளி சேனை மற்றும் தென்னைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர்ச்சியாக காட்டுயானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த காட்டு யானைகள், எங்களின் வீடுகளை உடைப்பதுடன் எங்களது உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் பல தடவைகள் வந்து பார்வையிட்டுயிட்டு செல்கின்றபோதிலும், எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆகவே, எமது நிலைமையினை உணர்ந்து, இந்த சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.