அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பானது மற்றும் நூற்றுக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார்.
அவுகஸ் எனப்படும் இந்த ஒப்பந்தம், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்குக் கொடுக்கும்.
இதில் உள்ள நலன்களைப் பாதுகாப்பதில் பிரித்தானியா “கடினத்தன்மையுடன்” இருக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது என கூறினார்.
ஆனால் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் கைச்சாத்திட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்தாக்கியுள்ளது.
பிரித்தானியாவை உள்ளிடக்கிய குறித்த அவுகஸ் ஒப்பந்தமானது சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகின்றது.