ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 19 வயதான துப்பாக்கிதாரி ஒருவர் மத்திய ரஷ்ய நகரமான கசானில் உள்ள தனது பழைய பாடசாலையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Очевидцы сообщают о стрельбе в Пермском государственном университете. Студенты покидают здание через окна. pic.twitter.com/TFDpTR0rGV
— РЕН ТВ | Новости (@rentvchannel) September 20, 2021