ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் – ஹமேத் அல் சபா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான 50 வருட நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவு ஆகியன தொடர்ந்தும் வலுப்படுத்தப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் பலர் குவைத் நாட்டில் பணியாற்றுவதாக ஜனாதபதி சுட்டிக்காட்டியுள்ள நிலையில் திறமையான தொழிலாளர்களக்கு மேலும் சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்
துறைமுக நகரம், காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி துறையில் நாட்டில் காணப்படும் முதலீட்டு வாய்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குவைத் பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்
இதேவேளை உணவு, பாதுகாப்பு, கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.