மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் சொத்துக்களை தாக்கப் பயன்படுத்தப்படும் ஈரானிய ஏவுகணை தளங்களை ரோயல் விமானப்படை ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாகத் தாக்க முடியும் என்று இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.
F-35 மற்றும் டைபூன் ஜெட் விமானங்கள் தற்போது ஈரானால் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மட்டுமே சுட்டு வீழ்த்தி வருகின்றன.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆரம்ப தாக்குதல்களில் இங்கிலாந்து பங்கேற்க மறுத்தாலும், பிரித்தானியா தற்காப்பு நடவடிக்கையை நிச்சயமாக ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் ஏவுகணைகளுக்கு எதிராக தற்காப்புத் தாக்குதல்களை நடத்த பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில் துணைப் பிரதமரின் இந்தக் கூற்று வந்துள்ளது.
இதேவேளை, மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிராந்தியத்தில் இங்கிலாந்தின் இராணுவ இருப்பை வலுப்படுத்தும் முயற்சியாக வியாழக்கிழமை மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் பிரிட்டிஷ் போர் விமானங்களை அனுப்புவதாக இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் உறுதியளித்துள்ளார்.












