ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார்.
குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் குவாட் கூட்டமைப்பில் பேசும் அவர், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். அதேநேரம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசுவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.