ஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை தாலிபான்கள் மதிக்க வேண்டும் எனவும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களை தடுக்கக் கூடாது எனவும் கூட்டறிக்கையில் இரு தலைவரும் குறிப்பிட்டுள்ளனர்.