கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முடிவானது அந்நிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா முழுமையாக எடுக்க வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பவர்களை இணைப்பது நிறுவனச் சட்டத்தின்படி உரிமையை கட்டுப்படுத்தும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அத்தோடு மின்நிலையத்தை நிர்வகிக்க அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே அமெரிக்க நிறுவனதிற்கு குறித்த பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.