கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது.
தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் யொஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதனால் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜப்பானிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓகஸ்ட் நடுப்பகுதியில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், சமீபத்திய வாரங்களில் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.