பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தனது கடற்பரப்பில் மீன் பிடிக்க 47 விண்ணப்பங்களில் வெறும் 12 சிறிய கப்பல்களுக்கு மட்டுமே உரிமங்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில் மீன்பிடி விவகாரம் அரசியல் நோக்கங்களுக்காக பிணைக் கைதிகள் போன்று நடத்த கூடாது என்று பிரான்ஸ் கடல்த்துறை அமைச்சர் அன்னிக் ஜிரார்டின் கூறியுள்ளார்.
இருப்பினும் மீதமுள்ள விண்ணப்பங்கள் குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.