ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியமை குறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி ஆகிய இருவரும் கூறினர்.
ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டார். மேலும் அவருக்கு மாறுபட்ட ஆலோசனை வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
திரும்பப் பெறும் நடவடிக்கையின் போது தற்கொலைத் தாக்குதலில் 182 பேர் கொல்லப்பட்டனர். ஓகஸ்ட் 26 அன்று 13 அமெரிக்க பணியாளர்கள் மற்றும் 169 ஆப்கானியர்கள் விமான நிலைய வாயிலால் கொல்லப்பட்டனர்.