இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் சலுகை குறித்து சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது, குறிப்பிட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர்கள் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.