சீனாவில் இருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, இதனை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விவசாயத் துறை நிராகரித்துள்ளதாக பணிப்பாளர், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இதுகுறித்து உறுதி செய்யப்பட்டதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவுடன் கூடிய பசளையை விவசாயத் துறை ஒருபோதும் நாட்டிற்குள் அனுமதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.