அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் முடக்க நிலை முடிவுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சமூக ஒன்றுகூடல்கள் சிலவற்றில் கலந்துகொள்ள முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் டிசம்பரிலிருந்து கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.