பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு இராணுவம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் ஏற்றிச் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவசர அவசரமாக பெட்ரோலை வாங்க பொதுமக்கள் முயற்சி செய்கின்றமை காரணமாக பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
அதை அடுத்து, இராணுவ கனரக வாகன ஓட்டுநர்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் எரிபொருள் விநியோகத்தைச் சீர் செய்ய அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டது.
மேலும், வெளிநாட்டு ஓட்டுநர்களுக்குக் குறுகிய காலத்திற்கு விசா தள்ளுபடி செய்யப்படும் என்றும் பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்தது.
இதற்கிடையில், Shell, BP, Esso ஆகிய எரிபொருள் நிறுவனங்கள், பிரிட்டனில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் உள்ளதாக வலியுறுத்தியுள்ளன.