கிழக்கு லடாக் பதற்றத்துக்கு இந்தியாதான் மூலக் காரணம் என சீனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாடு உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும், இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து ஒப்பந்தங்களையும் மதிக்காமல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் முந்தைய நிலையை தன்னிச்சையாக சீனா மாற்ற முயன்றதும், சீன பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளுமே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து ஏராளமான படைகளை குவித்து வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையிலுமே இந்திய இராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.