தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொதுச் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அரச சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அத்தியாவசிய அரச சேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பொது சேவைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கேற்ப தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியறுத்தப்பட்டுள்ளது.