இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நுண் பொருளாதார மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஆறு மாத கால பாதைக்கான கட்டமைப்பு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி செலணி தமது கடமைகளைத் தொடர்ந்தும் செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.