உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து நாடு முழுவதும் நாளைய (செவ்வாய்க்கிழமை) தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சுக்லா, சுதந்திரமாக செயல்பட விடாமல் அரசியல் தலைவர்களை தடுப்பது அபாயகரமாக உள்ளது.
இந்த வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி விவசாயிகள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு வருகை தந்த பா.ஜ.கவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மொத்தமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.