ரஷ்யா முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலிலிருந்து, சிர்கான் என்ற அதிவேக ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இது நவீன ஆயுத அமைப்புக்களின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிர்கான் ஏவுகணை ஒலியின் ஒன்பது மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலும் தாக்கும் திறன் கொண்டது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
சிர்கானின் சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவடையும் என்றும் 2022 இல் ரஷ்ய கடற்படையால் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.