பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் 26இலட்சத்து நான்காயிரத்து 40பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில் இதுவரை 38ஆயிரத்து 828பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், பத்தாயிரத்து 748பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 160பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 170பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 24இலட்சத்து 59ஆயிரத்து 052பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.