புளோரிடாவின் கிரெஸ்ட்ஹேவன் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், ஒன்பது பேருடன் சென்ற லியர்ஜெட் 60 (Learjet 60) விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:50 மணி (ET) (1750 GMT) அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணத்தி அனைவரும் உயிரிழந்ததாகவும், இந்தச் சம்பவத்தை “மிகவும் பயங்கரமான துயரம்” என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமானம் டெக்சாஸில் உள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பஹாமாஸில் உள்ள நார்த் எலியூதெரா விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது என்று அமெரிக்க ஃபெடரல் விமான நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=jOqPohW-ARQ

















