கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி உணவகம் ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது, சந்தேகநபர் தொடர்பான சிசிடிவி கமராவில் பதிவான புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்கள்:
- கல்கிசை பிரிவு பொறுப்பதிகாரி – 071 859 1661
- கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு – 071 859 6408













