தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு, வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு, மூத்த அதிகாரிகளை வட்டார பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில், தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.