பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் குரல்களை மௌனமாக்குவதற்கு பதிலாக அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவர்களின் மாதச் சம்பளத்தை 10,000 ரூபாயால் அதிகரிக்கவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியடைந்த கொள்கைகளால் தற்போது, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக ருவான் விஜேவர்தன கூறினார்.
இம்மாதம் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கம் தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.