மட்டக்களப்பு- களுதாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஆரையம்பதி பகுதியை சேர்ந்தவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுதாவளை பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு மோட்டர் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன், அதில் வந்தவரே படுகாயமடைந்துள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.