பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் காணப்படும் நாட்டிற்குள் எப்படி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தால் சலுகைகள் வழங்கப்பட்டாலும் வாழ்க்கைத் தரம், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற காரணிகளே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அடிப்படை அம்சம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்டுமானத் துறைக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு பதிலாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களுக்கு சலுகைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டார்.