பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இங்கிலாந்தில், சிறுவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
பெரியவர்கள் மத்தியில் கொவிட்-19 இன் பரவலானது வீழ்ச்சியடைந்தாலும் கூட இந்த அதிகரிப்பு ஒட்டுமொத்த தொற்றுகளை அதிகமாக வைத்திருக்கின்றது என ஆராய்ச்சி காட்டுகிறது.
லண்டன் இம்பீரியல் கல்லூரி தலைமையிலான ரியக்ட்-01 ஆய்வின்படி, 17 வயதிற்குட்பட்டவர்களிடையே தொற்றுநோய் வளர்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1க்கு மேல் உள்ள ஆர் எண் என்றால் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் 1 க்கு கீழே தொற்று வீதம் குறைகின்றது.
இதற்கு நேர்மாறாக, 18 முதல் 54 வயதுடையவர்களின் எண்ணிக்கை 0.81 என மதிப்பிடப்பட்டது. இது தொற்றுநோய் குறைவதைக் குறிக்கிறது. 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது பரந்த அளவில் நிலையானது.
கொவிட்-19 உடன் 13 முதல் 17 வயதுடையவர்களின் சதவீதம் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 27 வரை 2.55 சதவீதமாகவும், 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களில் 2.32 சதவீதமாகவும் இருந்தது. இது ஒவ்வொரு வயது வந்தோருக்கும் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.