ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 47பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 70 பேர் காயமடைந்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் நாள் முழுவதும் சற்றே மாறுபட்ட உயிரிழப்பு புள்ளிவிhரங்களை கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த தாக்குதலுக்கு முன்னதாக எந்த அமைப்பும் உரிமை கோராத நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இதற்கு முந்திய வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல் நடந்ததில் ஐம்பது பேர் உயிரிழந்மை குறிப்பிடத்தக்கது.