அத்தியாவசியமற்ற பயணங்களை குறைந்தபட்டசம் டிசம்பர் மாத இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றாடம் சுமார் 700 கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், அத்தியாவசியமற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உறவினர்களைப் பார்ப்பதற்கோ அல்லது சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவதற்கான காலம் இதுவல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.