60 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் அல்ஜீரிய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி பிரெஞ்சு பொலிஸார் அல்ஜீரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் பல நூறு பேர் தங்கள் உயிரை இழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்த சமபவத்தின்போது சுமார் 12,000 அல்ஜீரியர்கள் கைது செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்ததோடு கொலையும் செய்யப்பட்டனர்.
அன்று குற்றங்கள் நடந்ததை அங்கீகரித்த முதல் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் என்பது குறிப்பிடத்தக்கது.