எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்கு சமுகமளிக்க அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி ஜூலை 12 ஆம் திகதி முதல் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்களின் சம்பள நெருக்கடி 2022 வரவு செலவுதிட்டத்தின் மூலம் தீர்க்கப்படும் என இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார்.
எனவே எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் வரவு செலவு திட்ட உரையை முன்னிட்டு தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.