முதுகெலும்புள்ள ஆளுந்தரப்புப் பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைக்காது அங்கிருந்து வெளியேறி குறித்த விமர்சனங்களை முன்வைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதனைத் திறம்பட முன்னெடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கின்ற நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குரிய வேலைத்திட்டம் தம்மிடம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்ற பிரபல ஏலவிற்பனை நிறுவனமாக அரசாங்கம் மாறியிருக்கின்றது என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். (நன்றி கேசரி)