பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 49ஆயிரத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 84இலட்சத்து 97ஆயிரத்து 868பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 38ஆயிரத்து 629பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து நான்காயிரத்து 586பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 791பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 69இலட்சத்து 54ஆயிரத்து 653பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.