இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாகனத் திருட்டுகள் சுமார் ஐம்பது சதவிகிதம் அளவுக்குக் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சமீபத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கார் திருட்டு விகிதம், பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, அண்மைக் காலங்களில் குறைந்திருந்த போதிலும், ஐம்பது வீதம் அதிகரித்துள்ளதாக வெளிப்படுத்தியுள்ளன.
கார் திருட்டு ஒரு இலாபகரமான உலகளாவிய குற்றச் செயல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திருடர்கள் இங்கிருந்து கார்களைத் திருடி, பின்னர் அவற்றை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்கின்றனர்.
சில மணி நேரங்களிலேயே, அந்த வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதால், அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது. இது சந்தேக நபர்களைப் பிடிப்பதையும் கடினமாக்குகிறது.
அதிக எண்ணிக்கையிலான திருடப்பட்ட வாகனங்கள் ஐக்கிய அரபு அமீரகம், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















