ஜூலை நடுப்பகுதிக்கு பின்னர் மீண்டும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்கள் சவாலானவை என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் 49 ஆயிரத்து 156 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மேலும் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலைமை தொடர்ந்தால் என்.ஹெச்.எஸ். கடுமையான அழுத்ததை எதிகொள்ள நேரிடும் என அரசாங்க ஆலோசகர் பேராசிரியர் அண்ட்ரூ ஹேவர்ட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது குளிர்காலம் என்பதனால் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு என்பது எதிர்பார்க்கப்படுவதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
அத்தோடு தற்போதைய நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.