உள்நாட்டுப் போரை தடுக்க இராணுவம் திங்கட்கிழமை முதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக சூடானின் ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பிற்காக தளபதியின் வீட்டில் காவாலில் வைக்கப்பட்ட பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக் இப்போது வீடு திரும்பியுள்ளார் என்று அவர் கூறினார்.
தலைநகர் கார்ட்டூமில் இரண்டாவது நாளாக வீதிகள்ள், பாலங்கள், கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் அங்கு தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைதியின்மை காரணமாக குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் தாங்கள் கண்ட ஆபத்துகள் நாட்டை உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்ற நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக தளபதி தெரிவித்துள்ளார்.