ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதன்படி இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின் படி இந்தியாவிற்கு விலக்களிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் காட்சா சட்டத்தின்படி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நாடுகளுடன் இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க முடியும்.
ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியாவிற்கும் பொருளாதார தடைகளை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையிலேயே கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.