கிழக்கு ஆப்கானிஸ்தானில் இசைப்பதை நிறுத்துவதற்காக, தங்களை தலிபான்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட துப்பாக்கிதாரிகள் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
நங்கர்ஹர் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் துப்பாக்கி ஏந்திய மூவரில் இருவர் கைது செய்யப்பட்டதாக தலிபான் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியின் போது இசை நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் புதிய அதிகாரிகள் இதுவரை அத்தகைய கட்டுப்பாடுகளை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.