கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வைத்தியர்கள், சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சில சமயங்களில் சுகாதார விதிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது மிகவும் பரிதாபகரமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும் மோசமான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்துவதாக அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்தகைய நபர்கள் முகமூடி கூட அணியாமல் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அத்தகைய நபர்களே சுகாதார விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று சாதாரண மக்கள் நினைக்கலாம் என்றும் இது ஒரு தீவிரமான சூழ்நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.