ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் 50ஆயிரத்து 87பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 29ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 16இலட்சத்து 93ஆயிரத்து 532பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 268பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 463பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 74ஆயிரத்து 142பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 877பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 14இலட்சத்து 69ஆயிரத்து 303பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.