நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு கொரோனா தடுப்பு குழு அனுமதி வழங்கியது.
அதற்கமைய, இன்று கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இதற்கமைய பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.