தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில், அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வுகளை மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன்போது பேசிய அவர், ”தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 47 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
சுமார் 260 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.