விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
அத்தோடு, இன்று முதல் தொடர்ச்சியாக 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் உரிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவில்லை.
அரசங்கத்தினால் முடியாமல்போன 50 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பம் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளாதாகச் சபை முதல்வர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான விசேட தெரிவுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகச் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.