டெல்லியில் தீபாவளியைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாக காற்று மாசு நீடிக்கிறது.
தீபாவளிப் பட்டாசுகள் வெடிப்பு மற்றும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்துவருவதால் கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாசு அதிகரித்துள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம் காற்று மாசு அதிகரித்து வருவதால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாசு காரணமாக நுரையீரல்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் கொரோனா நோயாளிகளுக்குத் தீவிரமான பாதிப்பும் மரணமும் நேரிடலாம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.