பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுமுறை நாட்களில் ஷொப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் பண்டிகை நிகழ்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் புறக்கணித்து வருவதால், ஜனாதிபதி தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தை தொடர்ந்து புதிய கட்டுப்பாடு விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைய நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சிறைத்தளவிலான அதிகரிப்பு பதிவாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.