சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி செயற்பட்ட 495 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் ஓரளவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியது.
எனினும் கொரோனா பரவல் முற்றாக நீக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டுமென அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.